அடியாட்களுடன் வந்து வீட்டை இடித்த ஊராட்சி மன்ற தலைவர் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

Update: 2025-05-27 02:22 GMT

கள்ளக்குறிச்சி அருகே, ஊராட்சி மன்ற தலைவர் அடியாட்களுடன் வீட்டை இடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் தனது இடத்தில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த நிலையில், வீடு கட்டிய இடத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக கூறி, ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மின் இணைப்பை துண்டித்துவிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் ஜே.சி.பி. இயந்திரத்தை வைத்து வீட்டை இடித்துள்ளார். மேலும், கொளஞ்சி குடும்பத்தினரை தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில், அதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்