ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் மோசடி | கணவன் மனைவியை தட்டி தூக்கிய போலீசார்
ஆன்லைன் மூலம் ரூ.56 லட்சம் மோசடி-கணவன்,மனைவி கைது ஆன்லைன் விளம்பரம் மூலம் சுமார் 56 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சேலத்தை சேர்ந்த தம்பதியை புதுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி அபிராமி இருவரும் ஆன்லைன் டிரேடிங் மூலம் 10 சதவீதம் லாபம் பெறலாம் என்று கூறி பலரிடம் பணத்தை பெற்றுள்ளனர். இதில் சுமார் 23 பேர் முதலீடு செய்தும் திருப்பி பணத்தை தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து புதுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மணிகண்டனையும் அபிராமியையும் கைது செய்தனர்.