4 வயது சிறுவன் மீது கொட்டிய எண்ணெய்..! அரசிடம் உதவி கோரும் தாய்

Update: 2025-05-22 02:39 GMT

படுகாயம் அடைந்த சிறுவன் - அரசிடம் உதவிகோரும்

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள ஜரினாக்காடு பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன், சமையல் எண்ணெய் கொட்டி படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜரினாக்காடு பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா. இவரது நான்கு வயது மகன் பிளஸ்வீன் மீது சமையல் எண்ணெய் கொட்டி, படுகாயம் அடைந்துள்ளார். இதனால் தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மகனை காப்பாற்ற 3 லட்சம் ரூபாய் தேவை என்பதால் தாய் கீர்த்தனா அரசிடம் உதவிகேட்டு கோரிக்கை வைத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்