மாறுவேடத்தில் நின்ற அதிகாரிகள்... சுற்றிவளைக்கப்பட்ட நபர்... சென்னை Airportல் பரபரப்பு

Update: 2025-06-19 12:02 GMT

அபுதாபியில் இருந்து சென்னைக்கு 2 கிலோ தங்கத்தை கடத்திய இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை வரும் விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில், மாறுவேடத்தில் கண்காணித்த சுங்கத்துறை அதிகாரிகள், 32 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து, சுமார் 2 கிலோ தங்கத்தை கண்டுபிடித்தனர்.

கடந்த 10ம் தேதி அபுதாபியில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் தங்கத்தை கடத்திய அந்த நபர், தான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு இறங்கி வெளியே வந்துள்ளார். பின்னர் மும்பையில் இருந்து மற்றொரு விமானம் மூலம் சென்னைக்கு வந்து, தான் தங்கம் வைத்த விமானம் செல்லும் இடங்களை சிலரது உதவியுடன் கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இண்டிகோ விமானம், கடந்த 14ம் தேதி கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வர இருப்பதை அறிந்த அந்த இளைஞர், 13ம் தேதி சென்னையில் இருந்து கொல்கத்தா சென்றுள்ளார். பின்னர் தான் சீட்டுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்த விமானத்தில் அதேசீட்டில் சென்னைக்கு டிக்கெட் முன்பதிவு செய்து வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்தவுடன் 2 கிலோ 30 கிராம் தங்கத்தை எடுத்து கொண்டு, தனது கைப்பையில் மறைத்து வைத்து வெளியே வந்து போது சுங்கத்துறையினர் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்