எவ்வளவு தள்ளியும் ஸ்டார்ட் ஆகாத அதிகாரியின் கார்... ஷாக் ஆன ஊழியர்கள்

Update: 2025-06-12 06:12 GMT

சங்கரன்கோவிலில் தனியார் காய்கறிகள் நாளங்காடிக்கு சீல் வைக்க வந்த வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனம் தள்ளியும் ஸ்டார்ட் ஆகாததால், வாகனத்தை தள்ளிய ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சங்கரன்கோவிலில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த காய்கறிகள் நாளங்காடிக்கு சீல் வைக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்போடு வந்த வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனம் எவ்வளவு தள்ளியும் ஸ்டார்ட் ஆகாததால் அங்கே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. பின் வாகன ஓட்டுநர் இன்ஜினை திறந்து சிறிது நேரம் சரி செய்த பிறகே வாகனம் ஸ்டார்ட் ஆனது.

Tags:    

மேலும் செய்திகள்