ஓட்டுனரை காலணியால் அடித்த அதிகாரி - அதிர வைத்த வீடியோ - பாய்ந்தது நடவடிக்கை
மதுரையில் அரசு பேருந்து ஓட்டுனரை, அதிகாரி செருப்பால் அடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரைஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில்
பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். நீண்ட நேரமாகியும் பேருந்தை இயக்காததால் பயணிகள் ஓட்டுநரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரி உத்தரவின்றி பேருந்தை எடுத்து செல்ல முடியாது என ஓட்டுநர் தெரிவித்த நிலையில், பயணிகள் நிலைய உதவி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த உதவி மேலாளர் ஓட்டுநரை செருப்பால் அடித்துள்ளார். இதனை பயணி ஒருவர் எடுத்த வீடியோ வெளியானதை தொடர்ந்து உதவி மேலாளர் மாரிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.