Oneside love | fight | முத்திப்போன ஒன் சைடு லவ்.. பிளேடால் மூஞ்சியில் பூரான் விட்ட 2k Kids-கள்
ஈரோடு அருகே சிறுமி மீதான ஒரு தலை காதல் விவகாரத்தில், தாக்குதலில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். பவானி அருகே உள்ள மண் தொழிலாளர் 2 வது வீதி பகுதியில், ஒரு தலை காதல் விவகாரத்தில், இரண்டு சிறுவர்கள் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர். இதை தடுக்க சென்ற சிறுவனின் தந்தை பட்டாபிராமன் உட்பட மூன்று பேரை, சிறுவர்கள் கற்களால் தாக்கி, பிளேடால் கீறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பட்டாபிராமன் உட்பட மூன்று பேர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் சிறுவர்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், பொது மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 5 சிறுவர்களில் 3 பேர் பிடிக்கப்பட்டு, சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.