Cuddalore | ஹோட்டலில் மனிதக்கறி கேட்டு தாறுமாறாக ரகளை - கடலூரில் பகீர் சம்பவம்

Update: 2026-01-12 09:39 GMT

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், ஹோட்டலில் மனிதக்கறி கேட்டு உரிமையாளர் உள்ளிட்டோரை தாக்கிய 3 பேரை போ​லீசார் கைது செய்தனர். பெண்ணாடம் அருகே பொன்னேரி கிராமத்தில் தமிழழகன் என்பவர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு, தி​டீர்குப்பத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், அவரது நண்பர்கள் கவியரசன், பிரசாத் ஆகிய மூவரும் மதுபோதையில் சாப்பிடச் சென்றனர். அப்போது, மனிதக்கறி கொண்டு வருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், தமிழழகன் மற்றும் ஊழியர் தினேஷ்பாபு ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். மேலும், ஹோட்டலில் இருந்த உணவுப்பொருட்களை கீழே கொட்டி மூவரும் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழழகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்