நேரில் கம்மி ரேட்... ஆன்லைனில் அதிக கமிஷனா?
Swiggy, Zomato-க்கு ஆப்பு வைத்த ஹோட்டல்கள்...
மாறி வர காலகட்டத்துக்கு ஏற்ப இப்பல்லாம் ஆன்லைன்ல உணவு ஆர்டர் செஞ்சு சாப்புட்ர பழக்கம் ரொம்பவே அதிகரிச்சிருக்கு. குறிப்பா சொல்லனும்னா பெருநகரங்கள்ள மக்கள் உணவகங்களுக்கு நேரா போரத விட அவங்களுக்கு பிடித்த உணவங்கள்ள இருந்து பிடிச்ச உணவ ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வீட்டுல இருந்து சாப்படவே விரும்பரதையும் பார்க்கமுடியுது. இது சமைக்கரதுக்கான நேரத்த மிச்சப்படுத்துது, வசதியாவும் இருக்குங்கரதுனால மக்கள் இந்த ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள அளவுக்கதிகமா சார்ந்திருக்காங்கங்கர கூற்றும் நிலவுது. ஆனா இப்ப பெரு நகரங்கள தாண்டி சிறு டவுன் பகுதிகள்ளயும் இந்த பழக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கிருக்கு. அந்த வகையில நாமக்கல் மாவட்டத்துல இருக்கர நகர பகுதிகள்ள இயங்கர உணவகங்கள் இதுக்கு மேல ஸ்விக்கி,சோமாட்டோ போன்ற ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி இனிமே கிடையாதுன்னு அதிரடி அறிவிப்ப வெளியிட்டுருக்காங்க. அதுக்கேத்தமாதிரி ஜூலை 1ல இருந்து அத அமலும் படுத்திட்டாங்க. இத பத்தி விரிவா பார்ப்போம்.