கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம், 2024-25 நிதியாண்டில் 2 ஆயிரத்து 714 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டில், 172 லட்சம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளதாகவும், மொத்த மின் உற்பத்தி 27 ஆயிரத்து 865 புள்ளி ஐந்து எட்டு மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி. குழுமம் இதுவரை இல்லாத அளவில், அதிகபட்சமாக 7 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்குமேல் மூலதன செலவை அடைந்துள்ளதாகவும், நிதி நிலையை பொறுத்தவரை, 2024- 25 நிதியாண்டில், 17 புள்ளி ஐந்து ஐந்து சதவீத வளர்ச்சியுடன், 15 ஆயிரத்து 282 கோடியே 96 லட்சம் ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.