Nilgiri | Tiger | இந்த பக்கம் பாத்தா புலி.. அந்த பக்கம் பாத்தா கரடி.. மரண பயத்தில் நீலகிரி மக்கள்
நீலகிரி மாவட்டம் உதகை சிங்காரா நீர் மின் நிலையம் அருகே சிலர் காரில் சென்ற போது, சாலையோரம் நின்ற புலியால் அச்சமடைந்தனர். காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை பார்த்தும் அசராத புலி, சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றது.
மறுபுறம், தொட்டபெட்டா மலை சிகரம் செல்லக்கூடிய சாலையில் உள்ள வன கணபதி கோயிலில் புகுந்த கரடி, பூஜைக்காக வைத்திருந்த எண்ணெய் பாட்டிலை வாயில் கவ்விச் சென்ற வீடியோவும் வெளியாகி உள்ளது.