பிறந்த குழந்தைகளை கட்டாந்தரையில் படுக்க வைத்த அவலம் - அரசு ஹாஸ்பிடலில் அதிர்ச்சி
தரையில் படுக்க வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள்
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், பிறந்த பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கச்சிராயப்பாளையம் சாலையில், அரசு மகப்பேறு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைந்துள்ள நிலையில், அவை சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில், பச்சிளம் குழந்தைகளுக்கு படுக்கை வசதியில்லாமல், தரையில் படுக்க வைத்துள்ளனர். இது குறித்து வருத்தம் தெரிவித்த தாய்மார்கள், மருத்துவமனை நிர்வாகம் விரைவில் சேதமான படுக்கைகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.