நெல்லை டவுனை கதிகலங்கவிட்ட படுகொலை - பின்னணியில் 3 குட்டி சுள்ளான்கள்?

Update: 2025-04-08 09:58 GMT

நெல்லை டவுண் பகுதியில் இளைஞரை வெட்டி படுகொலை செய்து, முட்புதரில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் அளித்த தகவல் மூலம் இது தெரியவந்த நிலையில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்கள் கீதா மற்றும் சாந்தராமன் ஆகியோர் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் குருநாதன் கோயில் உள்ளிட்ட பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் தொடர்புடைய 3 சிறார்கள் உள்பட 4 பேரைப் பிடித்து நெல்லை டவுண் போலீசார் விசாரணை செய்தனர். அதில், கொலை செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதே ஆன கட்டிடத் தொழிலாளி ஆறுமுகம் எனத் தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, குருநாதன் கோயில் அருகே முப்புதரில் புதைக்கப்பட்டு இருந்த உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆறுமுகம் என்பவருக்கும், சிறுவன் ஒருவனின் சகோதரிக்கும் இடையே காதல் விவகாரம் இருந்ததாகவும், ஆறுமுகம் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றொருபுறம், சிறுவனின் சகோதரியை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட முன் விரோதத்தில், அந்த சிறுவன் நண்பர்களுடன் திட்டமிட்டு ஆறுமுகத்தை மது குடிக்க அழைத்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்