Nellai || நெல்லையில் மூடப்பட்ட கல்லூரி மாணவர்கள் வெளியேறாததால் அதிர்ச்சி
நெல்லையில், மாணவர்கள் எலி காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான தனியார் கல்லூரியை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. கல்லூரி வளாகத்தில் நர்சிங் கல்லூரி மாணவிகள் அங்கேயே தங்கியுள்ளதால், சுகாதாரத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூடி மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அனுப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.