நடைமுறைக்கு வராத ரயில்வே அறிவிப்பு | ஏமாற்றத்தில் பயணிகள் | Nellai - Sengottai

Update: 2025-05-03 14:08 GMT

நெல்லை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்கபடுமென்ற அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு புறப்படும் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை ஏற்று கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயிலுக்கு பதிலாக, மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து புறப்படும் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப் படுமென அறிவிப்பு வந்தது. ஆனால் அந்த அறிவிப்பும் தற்போது நடை முறைக்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்