Nellai | தன் மகளையே சீரழித்த வெறி பிடித்த தந்தைக்கு மரண தண்டனை எழுதிய கோர்ட் - நெல்லையில் பரபரப்பு

Update: 2026-01-05 10:45 GMT

தன் மகளையே சீரழித்த வெறி பிடித்த தந்தைக்கு மரண தண்டனை எழுதிய கோர்ட் - நெல்லையில் பரபரப்பு

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தனது 14 வயதுடைய இரண்டாவது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதில் சிறுமி கார்ப்பமான நிலையில், சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தைக்கு தண்டனை விதித்து, அரசு சார்பில் 10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்