Nellai bustand || ரூ.85.56 கோடியில் பேருந்து நிலையம் - சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு
நெல்லை சந்திப்பு பகுதியில் ரூ.85.56 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில், ஒரே ஆண்டில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாக கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அதிலும் முக்கிய இடங்களில் சுமார் 9 கேமராக்கள் செயலிழந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக அவற்றைச் சரி செய்ய வேண்டும் என்று வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.