Nellai | காயங்களுடன் சுடுகாட்டில் கிடந்த சடலம் - அடுத்தடுத்து வெளியாகி நெல்லையை நடுங்கவிட்ட பின்னணி
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே நடந்த இளைஞர் கொலையில், 3 பேர் கைதான நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த முதலூரில் பழைய கார்களை விற்கும் தொழில் செய்யும் மார்ட்டின் என்பவர் சில தினங்களுக்கு முன்பு தோனித்துறை சுடுகாட்டு பகுதியில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, முருகப்பெருமாள், நம்பிராஜன், கிதியோன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, ஏமன்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் மார்ட்டினுக்கு பழக்கம் இருந்ததாகவும், அந்தப் பெண்ணின் சகோதரன் பலமுறை கண்டித்தபோதிலும் மார்ட்டின் உறவை கைவிட மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, முருகப்பெருமாள் உள்ளிட்ட மூவர் மூலமாக, மார்ட்டினை வரவழைத்து கொன்றது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள நிலையில், மூளையாக செயல்பட்ட பெண்ணின் சகோதரர் உள்ளிட்டோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.