வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான வாக்காளர் சிறப்பு முகாம் இன்றும் நடைபெறுகிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னையில் சுமார் 4 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் பெயர் விடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்களும் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,
பெயர் தவறாக சேர்க்கப்பட்டிருந்தால் படிவம் 7-ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், முகவரி மாற்றம், தொகுதி மாற படிவம் 8-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.