கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜிற்கு அடைக்கலம் கொடுத்ததாக போடப்பட்ட வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை சம்பவத்தில், தீரன்சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜிற்கு அடைக்கலம் அழித்தது தொடர்பான வழக்கு நாமக்கல் எஸ்.சி.எஸ்.டி நீதிமன்றத்தில் தனியாக நடந்து வருகின்றது. இதில் அன்பரசு என்பவர் 17வது குற்றவாளியாக சேர்கப்பட்டுள்ள நிலையில், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்தாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வழக்கானது ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.