நாக பஞ்சமி வழிபாடு - கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் பங்கேற்பு
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வரர் கோவிலில் நாக பஞ்சமி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. மூலவர் சிவலிங்கத்திற்கு வாசனை திரவங்களால் சிறப்பு அபிஷேகமும், பஸ்ம ஆரத்தியும் செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மகாகாலேஸ்வரரை பக்தர்கள் மனம் குளிர தரிசனம் செய்தனர். கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் உள்பட சில முக்கியஸ்தர்கள் பஞ்சமி வழிபாட்டில் பங்கேற்றனர்.