பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு நிவாரணம் வழங்க ஈ.பி.எஸ் கோரிக்கை
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்க கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் அமெரிக்கா சமீபத்தில் 25% வரியை விதித்ததாலும், அதைத் தொடர்ந்து 50% ஆக அதிகரித்ததாலும், பின்னலாடை ஏற்றுமதி தொழிலின் நிலை மோசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவிற்கு அப்பால் ஏற்றுமதி இடங்களை பன்முகப்படுத்த, மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை மனதாரப் பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு இழப்பீடுகள் மற்றும் சலுகைகள், பருத்தி நூல் மீதான வரி குறைப்பு, கடன் மறுசீரமைப்பு மற்றும் வட்டி நிவாரணம் முதலியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கைகளையும் வைத்துள்ளார்.