NH-ல் இளைஞர்கள் பைக் சாகசம்.. நேரில் பார்த்து நடுங்கும் மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்
மூணாறில் கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் சாகச பயணத்தில் ஈடுபட்டதால் சக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள மூணாறு சுற்றுலா தளத்திற்கு ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்லும் நிலையில், வாகன ஓட்டிகள் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர்கள் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்டதால் சக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.