Tiruvannamalai | "வழியிலேயே அதிக உயிரிழப்புகள்.. ஹாஸ்பிடலில் அதிர்ச்சி.."
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ளஅரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் போதுமான உபகரணங்களும் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் வருபவர்களுக்கு முதல் உதவி செய்து, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதால் வழியிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் செங்கம் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.