கடைக்குள் தூங்கும்போதே மாயமான பணம் - விடிந்து CCTV பார்த்த ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி
டீ கடை ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது கைவரிசை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நள்ளிரவில் டீக்கடை முன்பு கடை ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது கடைக்குள் புகுந்த மர்ம நபர் செல்போன்கள் மற்றும் பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இது குறித்து மணப்பட்டி நான்குவழிச் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் மதுரை வீரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகத்தை துணியால் மறைத்தபடி கடை முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஊழியரின் செல்போன் மற்றும் கடையின் உள்ளே இருந்த செல்போன் மற்றும் இரவு வியாபாரம் முடித்து வைத்திருந்த பணத்தை அந்த நபர் திருடி சென்றுள்ளார்.