``மகத்தான தலைவனை தமிழ்நாடு தவறவிட்டது’’ - கட்சியில் இருந்து விலகினார் நடிகை வினோதினி
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகியுள்ளார். தன்னிடம் பொருளாதார பின்புலம் இல்லை என்றும், கடமைகளைத் தட்டிக் கழித்து விட்டதாகவும் தெரிவித்த அவர், அரிய வாய்ப்புகள் தனக்குக் கிடைத்த போதும் அவற்றை தான் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார். கமல் எனும் மகத்தான தலைவரைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான்... என்று தெரிவித்த அவர், தொடர்ந்து தன் சிந்தனை தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும் என்று குறிப்பிட்டார்.