மாயமான பிரபல நடிகை கழுத்தறுபட்ட பிணமாக மீட்பு - விபத்தா? கொலையா? குழம்பும் போலீஸ்

Update: 2025-06-17 04:51 GMT

மாயமான மாடல் சீத்தல் கால்வாயில் சடலமாக மீட்பு

அரியானாவில் மாயமான நடிகை சீத்தல், கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானிபட்டை சேர்ந்த 24 வயதான சீத்தல் என்ற சிம்மி சவுத்திரி, கடந்த மாயமானதாக அவரது சகோதரி நேகா, கடந்த 14ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இந்நிலையில், கர்கோட்டா பகுதி அருகே, கால்வாயில் கார் விபத்துக்குள்ளாகி கிடப்பதாகவும், அதில், பெண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்த‌து. போலீசார் சோதனை செய்தபோது, கழுத்து அறுபட்டு சடலமாக சீத்தல் இருந்த‌தும், சுனில் என்ற அவரது நண்பர் படுகாயங்களுடன் இருந்த‌தும் தெரிய வந்த‌து. சுனிலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சீத்தலின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்