- நாமக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமாக உயிரிழந்த நிலையில், மாயமான கணவர் கரூரில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. பிரேம்ராஜ் என்பவரின் மனைவி மற்றும் இரு குழந்தைகளின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மாயமான பிரேம்ராஜ் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், அவர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும், பிரேம்ராஜ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.