பேருந்தில் பயணம் செய்து, மக்கள் கொடுத்த மனுக்களை ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 புதிய வழித்தடங்களில் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் சிவசங்கர், பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பிரித்து படித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவ மழையால் பாதிக்கப்படும் மின் கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்ய, மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.