Metro | "மெட்ரோ பாலம் விபத்து - உரிய விசாரணை நடத்தப்படும்"- சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

Update: 2025-06-13 08:21 GMT

சென்னையில் மெட்ரோ பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. விபத்து தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம்,, ஒரு வாரத்துக்கு முன்பு அமைக்கப்பட்ட 2 கான்கிரீட் கட்டுமானம் எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது என்றும், இடிபாடுகள் உடனடியாக அகற்றப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்