மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் சாலையில் சுற்றித் திரிந்த கடலூரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மகனைக் கண்டதும் தாய் கண்ணீர் மல்க ஆரத்தழுவிய காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது