மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு நினைத்து பார்க்க முடியா கூட்டம் - அக்னி விளக்காக மாறிய பக்தர்கள்

Update: 2025-01-30 02:56 GMT

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடி, நெய்வேத்தியம் செய்யப்பட்டது. தமிழகம் மட்டும் இன்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில பக்தர்கள், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, அங்காளம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி, ஓம் சக்தி அங்காளம்மா என்று முழக்கமிட்டு வழிபட்டனர். திரும்பும் திசையெங்கும் நெய் தீபத்தை ஏந்தியவாறு பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில், பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்