முதலமைச்சர் அண்மையில் திறந்து வைத்த கட்டிடங்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே போலி ஆவணம் தயாரித்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட குடியிருப்பில் வீடுகள் பெற்றுத்தருவதாக கூறி தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் 35 லட்சம் ரூபாய் பொது மக்களிடம் வசூல் செய்துள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் வீடு வாங்கி தராமல் போலியாக அரசு ஒதுக்கீட்டு ஆணையை தயார் செய்து வழங்கியுள்ளார். இது குறித்து பணம் கொடுத்தவர்கள் வினோத்திடம் கேட்ட போது கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்