Mayiladuthurai Incident | தந்தைக்கு திதி கொடுக்க வந்த மகன் கடலில் மூழ்கிய சோகம்
தந்தைக்கு திதி கொடுக்க வந்த மகன் கடலில் மூழ்கி பலி
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காவிரி சங்கமத் துறையில், தை அமாவாசையை முன்னிட்டு தந்தைக்கு திதி கொடுக்க வந்த விவசாயி முருகானந்தம், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சாவூரைச் சேர்ந்த இவர், கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கடலோரக் காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.