மணப்பாறையில் மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களை ஆட்டோ ஓட்டுனர்கள் மடக்கி பிடித்து போலிசில் ஒப்படைத்தனர்.
மணப்பாறை அருகே கலிங்கப்பட்டியைச் சேர்ந்த பெரியம்மாள் என்பவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்த போது டிப்டாப்பாக இருந்த இரண்டு பெண்கள் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துவிட்டு கடைவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
நகையயை காணவில்லை என் மூதாட்டி சத்தமிடவே இரண்டு பெண்களூம் தப்பிக்க முயற்சி செய்த போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் இரு பெண்களையும் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.