வட மாநில இளம்பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த நபர் - உதகையில் அதிர்ச்சி
உதகையில் வடமாநில இளம் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ பதிவு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். தனியார் ஓட்டலில் பணியாற்றும் 5 இளம்பெண்கள், இவர்கள் தங்கியிருந்த வீட்டில் உடை மாற்றும் போது மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியே அதனை வீடியோ எடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், போலீசில் புகார் அளித்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த கிரிதரன் என்பவரை கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.