Thirupathur Child Marriage |ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த நபர்-திருப்பத்தூரில் அதிர்ச்சி
Thirupathur Child Marriage |ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த நபர்-திருப்பத்தூரில் அதிர்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 14 வயது பள்ளி சிறுமியை, ஆசை வார்த்தை கூறி காதல் திருமணம் செய்த 27 வயது இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். வாணியம்பாடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது சகோதரி வீட்டிற்கு அருகே வசித்து வந்த 14 வயது சிறுமியை, காதல் செய்வதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, இளைஞரை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.