சென்னை நொளம்பூர் பகுதியில் ஏ.ஐ மூலம் ஆபாச வீடியோ தயாரித்து மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஜோ ரிச்சர்ட் என்பவர்,, சைபர் கிரைம் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு மணிப்பூர் பெண்ணிடம் கைவரிசை காட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தன் ஆசைக்கு இணங்காததால் டெக்னிக்கலாக நாடகமாடி பெண்ணுடன் உல்லாசமாக இருக்க அவர் முயற்சித்ததும் அம்பலமான நிலையில், புகாரின் அடிப்படையில் ஜோ ரிச்சர்ட்டை போலீசார் கைது செய்தனர்.