``ஹோட்டல் உணவில் காந்தம்?’’ வைரலான வீடியோ குற்றச்சாட்டை மறுத்த கடை உரிமையாளர்
Chennai Food Issue | ``ஹோட்டல் உணவில் காந்தம்?’’ வைரலான வீடியோ குற்றச்சாட்டை மறுத்த கடை உரிமையாளர்
ஆர்டர் செய்து வாங்கிய உணவில் காந்தம்? - தனியார் உணவகம் மறுப்பு
சென்னையில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய உணவில், காந்தம் இருந்ததாக கூறி, அயனாவரத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ வேகமாக பரவிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தனியார் உணவகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.