நேருக்கு நேர் மோதிய 2 கார்கள் - கடப்பாரையால் காரை உடைத்து வெளியே எடுக்கப்பட்ட உடல்கள்

Update: 2025-03-31 06:41 GMT

மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் ஆஷிக் அகமது என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் மதுரை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது பரமக்குடி அருகே கார் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவலர் ஆஷிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்