மதுரை மேயரின் கணவர் பொன். வசந்த் திமுக-வில் இருந்து சஸ்பெண்ட்

Update: 2025-05-29 10:28 GMT

Madurai | மதுரை மேயரின் கணவர் பொன். வசந்த் திமுக-வில் இருந்து சஸ்பெண்ட்

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த், தி.மு.க.விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகர் மாவட்டம், 57வது வார்டைச் சேர்ந்த பொன்வசந்த், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பொன்வசந்த், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்