மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா
பணிகள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் கோவிலில் இருந்து முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு நடப்பட்டது. மேலும் ஏப்ரல் 29 ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 8 ஆம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், 9ஆம் தேதி
தேரோட்டமும் நடைபெறவுள்ளது.