சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரை கடத்தி தாக்கி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,
வீடு திரும்பிய மாணவர் மற்றும் பெற்றோர் அதுகுறித்து அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், கடத்தலில் ஈடுபட்ட சிவக்குமார் மற்றும் பிரதாப் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கல்லூரியில் படிக்கும் பெண்ணை மாணவர் காதலித்ததாக கூறப்படும் நிலையில், அதுதொடர்பாக மாணவரை இருவரும் கடத்தி நிர்வாணப்படுத்தி தாக்கி வீடியோ எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.