கடன் வாங்கியவரை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய ஊழியர்கள்- தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-12-25 03:29 GMT

உளுந்தூர்பேட்டை அருகே கடனை வசூலிக்க சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்களுக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எறையூர் கிராமத்தில் கடனை வசூலிக்க சென்ற இடத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மோதலாக மாறியது. தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஒன்று சேர்ந்து கடன் வாங்கியவரை தாக்குவது மற்றும் அவரும் பதில் தாக்குதல் நடத்தும் காட்சிகளும், ரத்தம் சொட்ட ஆபாச வார்த்தைகளால் இரு தரப்பினரும் திட்டிக் கொள்ளும் காட்சிகளும் தற்போது சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகின்றன. இந்த காட்சிகளின் அடிப்படையில் எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்