பட்டியல் சமூக இளைஞர், 2 பெண்கள் மீது கொடூர தாக்குதல்-போலீஸ் விசாரணை

Update: 2025-05-07 02:00 GMT

ஓசூர் அருகே பட்டியல் சமூக இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதனை தடுக்க சென்ற பெண்கள் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பிரதீப் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை மற்ற சமூக இளைஞர்கள் 5 பேர் ஒன்று சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தடுக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரி மற்றும் சுமித்ரா ஆகிய இரு பட்டியல் சமூக பெண்களையும் அந்த இளைஞர்கள் கீழே தள்ளி தாக்கியதாகவும் தெரிகிறது. இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்