இரவில் பாசமாக போட்டு வாங்கி மறுநாள் வேலைக்கு வேட்டு - ஒரே இரவில் தலைகீழான IT லைஃப்..அதிர்ந்த இந்தியா
முதல் நாள் இரவு வரை ஒர்க் ரிப்போர்ட் கேட்டு வாங்கிய நிறுவனம், மறு நாள் காலையில், மொத்தமாக மூடிவிட்டு சென்றதால் ஏற்பட்ட பரிதவிப்பு தான் இது.
கோவை ஆர் எஸ் புரத்தில் இயங்கி வந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர்களின் போராட்டம் கடந்த 3 நாட்களாக பலரையும் அதிற்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சமீப நாட்களாக எம் என் சி நிறுவனங்களில் திடீர் பணி நீக்கம் நடப்பதாக
குற்றச்சாட்டுகளும் குமுறல்களும் ஆங்காங்கே வெளிபட்டு வந்த நிலையில்,
கோவை ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நீக்கம் தற்போது அந்த பிரச்சனையின் வீரியத்தை முழுமையாக வெளி கொண்டு வந்திருக்கிறது.
அமெரிக்காவை சார்ந்து இயங்கக் கூடியா ஐடி நிறுவனம் தான்
focus edumatics. இந்தியாவில் பெங்களூருவை தலைமை இடமாக வைத்து இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் கிளை கோவை ஆர் எஸ் புரத்தில் அமைந்துள்ளது. இனைய வழி கற்பித்தல் சார்ந்து இயங்கக் கூடிய focus edumatics-க்கிள், கோவை கிளையில் மட்டும் 3000 பேருக்கு மேல் வேலை செய்வதாக சொல்லப்படுகிறது.
இதில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே ஒர்க் ஃபுரம் ஹோம் அடிப்படையில் பணி செய்து வருகிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை ஊழியர்கள் அனைவரையும் ஒர்க் ஃபுரம் ஹோம் என கூறி வீட்டுக்கு அனுப்பிய நிறுவனம், சனிக்கிழமை இரவில் மொத்த ஊழியர்களின் வாழ்கையும் இருட்டில் தள்ளி இருக்கிறது.
இதனால் அதிர்ந்து போன ஊழியர்கள், மறு நாள் காலை நிறுவனத்தை முற்றுகை இட்டு போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். ஆனால்
எந்த முறையான பதிலும் கிடைக்காததால் , பாதிக்கபட்ட ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.
அதே நேரம் முன் அறிவிப்பு இல்லாமல் பணி நீக்கம் செய்த நிறுவனத்தை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.
"ஏன் சார்... நாங்க ரிலிவ் ஆகனும்னா மூனு மாசம் முன்னாடியே பேப்பர் போடனும்.... உங்களுக்கு வேணாம்னா இழுத்து மூடிட்டு
ஓடுவிங்களா..?"
"நாங்க எப்படி அடுத்த வேல தேடுறது" என பாதிக்கப்பட்ட ஐடி ஊழியர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதோடு, அவர்களுக்கு முறையாக சேர வேண்டிய சம்பளம், பணி அனுபவ சான்றிதழ் என எதை பற்றியும் கவலை இல்லாமல்,
பெட்டிக்கடையை பூட்டுவது போல shurt down செய்து விட்டு அமைதிகாப்பதாக குமுறுகிறார்கள்.
எக்ஸ்பீரியண்ஸ் சர்டிஃபிகேட் இல்லாததால், அடுத்த வேலையை கூட உடனடியாக தேடிக் கொள்ள முடியாத நிலையில்,
நிர்கதியான நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதோடு அந்த நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது போல
இல்லாமல், ஊழியர்கள் மூன்று மாதம் வேலைக்கு வரவில்லை என்பது போல கணக்கு காட்டி இருப்பதையும் கண்டித்திருக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஊழியர்களின் போராட்டத்திற்கு பிறகு, இந்த மாதத்திற்கான சம்பளத்தை மட்டும் தருவதாக நிறுவனம் ஒத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் சட்டப்படி நோட்டீஸ் பீரியட் கொடுக்காததால் மூன்று மாத சம்பளம் மற்றும் பணபலன்கள் அனைத்தையும் உடனே வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்த ஊழியர்கள், மறு நாள் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தில் திரண்டிருக்கிறார்கள்.
மல்டி நேஷ்னல் கம்பணிகள் , தொடர்ந்து இந்தியாவில் உள்ள தொழிலாளர் நல சட்டங்களை மதிக்காமல் காற்றி பறக்க விட்டு வருவதை அரசு முறையாக கண்காணிக்க வேண்டுமெனமும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.