தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் - தலைமைச் செயலாளர் ஆலோசனை

Update: 2025-05-28 03:01 GMT

JUSTIN || Tamilnadu | Police | தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் - தலைமைச் செயலாளர் ஆலோசனை

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 3:30 மணியளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம், கொலை கொள்ளை சம்பவங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்