மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்து உயர் நிலைக்குழுவுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, கேட்டறிந்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த திட்டத்தை மாணவர்களிடம் விரைந்து கொண்டு சேர்க்க, அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.