எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் கிரியாஸ் நிறுவனத்தின் 176-வது கிளை, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கிளையை, ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை அறிவித்ததால், பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் முதல் நாளிலேயே கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.