பள்ளிக்குள் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. - மாற்றப்பட்ட ஆசிரியர்கள்.. "முடியாது.." கிருஷ்ணகிரியில் பரபரப்பு..

Update: 2025-02-07 09:46 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, அரசுப் பள்ளி மாணவி, ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அங்கு பணியாற்றி வந்த ஆசிரியர்கள் அனைவரும் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது வேறு பள்ளிகளில் பணியாற்றி வந்த 4 பெண் ஆசிரியர்கள், இந்தப் பள்ளிக்கு பணிக்கு வந்துள்ளனர். மேலும் பல்வேறு துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள், மனநல மருத்துவர் குழுவினர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே, இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர், பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களை அனுப்ப மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்